வேலையிலிருந்து ஓய்வுபெறும் வயதை மறுஆய்வு செய்வதற்கு தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் துணை தலைமைச் செயலாளர் ஹெங் சீ ஹாவ் அழைப்பு விடுத்துள்ளார். முதியவர்கள் இன்னும் நீண்டகாலத்துக்கு வேலை செய்வதற்கான வழிவகை களைக் கண்டறிய புதிய முத்தரப்புக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை நேற்று நாடாளுமன்றத்தில் அவர் முன்வைத்தார். ஓய்வுபெறும் வயது ஒருமுறை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டில் அது 60 வயதிலிருந்து 62 வயதுக்கு உயர்த்தப்பட்டது. 2012ஆம் ஆண்டில் மறுநியமன வயது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி தகுதி பெறும் ஊழியர்களுக்கு 65 வயது வரை மறுநியமனம் வழங்குவது அல்லது வேலை இல்லாவிடில் தொகை ஒன்றைத் தருவது கட்டாய மாக்கப்பட்டது. இந்த வயது வரம்பு கடந்த ஆண்டில் 67ஆக உயர்த்தப்பட்டது.
ஓய்வுபெறும் வயது: மறுஆய்வு செய்ய அழைப்பு
1 mins read

