கூடுதல் உதவிக்கு அழைப்பு விடுக்கும் எம்பிக்கள்

கூடுதல் உதவிக்கு அழைப்பு விடுக்கும் எம்பிக்கள்

1 mins read
c8b3216c-22fa-496e-838a-3a7324982d9c
-
Google News Preferred Icon

பராமரிப்பாளர்கள், வேலை செய்யும் தாய்மார்கள், குடும்பங்களுக்கு அரசாங்கம் கூடுதல் உதவி வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் ஊழியர்களுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவு வழங்க எடுக்கப்படும் நடவடிக்கை களை அவர்கள் வரவேற்றபோதிலும் புதிய பொருளியலில் பின்தங்கி இருப்போருக்குக் கூடுதல் ஆதரவு தரும் வகையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

நீக்குப்போக்கான பணி நேரத்துக்கு கோரிக்கை விடுக்கும் உரிமையை ஊழியர் களுக்கு, குறிப்பாகப் பெண் களுக்கு வழங்குமாறு நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கே.தனலட்சுமி நேற்று நாடாளு மன்றத்தில் அழைப்பு விடுத்தார். சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் ஊழியர்களுக்கான தொழிற்சங்கத் தலைவருமான குமாரி தனலட்சுமி நாடாளுமன்றத்தில் தமிழில் உரை ஆற்றினார். தாதி ஒருவர் தமது உயர் அதிகாரியிடம் நீக்குப்போக்கான பணி நேரத்துக்காகக் கோரிக்கை விடுத்ததாகவும் அவரது வேலை களைப் பார்த்துக்கொள்ள ஆள் கிடைக்காததால் கோரிக்கை நிரா கரிக்கப்பட்டதாகவும் குமாரி தனலட்சுமி கூறினார். இதன் காரணமாக அந்தத் தாதி பதவி விலக நேரிட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரி வித்தார்.

நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கே.தனலட்சுமி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்