'பட்ஜெட் உபரிப் பகிர்வு சமுதாய ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்'

'பட்ஜெட் உபரிப் பகிர்வு சமுதாய ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்'

1 mins read
3e62e323-e51a-4a5b-b357-342a0f096cb4
-

வரவுசெலவுத் திட்ட உபரிகளை சிங்கப்பூரில் உள்ள வசதி குறைந் தோருடன் பகிர்ந்துகொள்வதை அரசாங்கம் தொடர வேண்டும் என்றும் அப்படி செய்வதன் மூலம் அனைவருக்கும் இந்த நாட்டில் பங்கு உள்ளது என்பதை சிங்கப்பூரர்கள் உணர்வர் என்றும் நிதி மற்றும் வர்த்தக, தொழில் ஆகியவற்றுக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவர் லியாங் எங் ஹுவா தெரி வித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் திரு லியாங் முதலில் உரையாற்றினார். வரவுசெலவுத் திட்ட உபரிகளை மக்களுக்குத் திருப்பி விநியோ கிக்கும் அணுகுமுறையை அரசாங் கம் ஏற்கெனவே கையாண்டு வருவதாக அவர் சுட்டினார். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப் பட்ட உபரியிலிந்து பொருள் சேவை வரி பற்றுச்சீட்டு நிதிக்கு $2 பில்லியன் வழங்கப்பட்டது. இந்தத் தொகை குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங் களுக்கு உதவியாக இருக்கும்.