பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழும் இடங்களில் போலிசின் அதிகாரம் விரிவாக்கப்படலாம்

பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழும் இடங்களில் போலிசின் அதிகாரம் விரிவாக்கப்படலாம்

1 mins read
03898d5c-335c-4b6c-a28b-4afac346bc98
-
Google News Preferred Icon

பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந் தால் அதை எதிர்கொள்ள அதிகாரிகளால் எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகளை ரகசிய மாக வைத்துக்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தில் நேற்று மசோதா ஒன்று முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்பட்டது. முன்வைக்கப்பட்ட பரிந்துரை யின்படி தாக்குதல்கள் நிகழும் இடங்களில் படமெடுக்கவோ கா ணொளி எடுக்கவோ குறுந்தகவல் அனுப்பவோ பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்படலாம். இந்தப் புதிய பொது ஒழுங்கு, பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப் பட்டால் போலிஸ் அதிகாரிகளின் அதிகாரம் விரிவாக்கப்படும்.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழும் இடங்களில் செய்தியாளர்கள் உட்பட பொதுமக்கள் படம், காணொளி எடுக்க முடியாது. பாதிக்கப்பட்ட இடத்தில் அதி காரிகளால் எடுக்கப்படும் பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து யாரிடமும் தகவல் அனுப்ப முடியாது. இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக $20,000 அபராதமும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். உள்துறை அமைச்சர் அதிகாரம் வழங்கும் பட்சத்தில் படம், காணொளி எடுப்பது மற்றும் தகவல் அனுப்புவதை நிறுத்த போலிஸ் ஆணையாளர் உத்தரவிடலாம்.

மசோதா நிறைவேற்றப்பட்டால் போலிசாரின் அதிகாரம் விரிவாக்கப்படும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்