காதுகேளா குறைபாடுள்ள முதிய சிங்கப்பூரர்களுக்கு நினைவாற் றல் நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு 2.3 மடங்கு அதிகம் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆகையால் காதுகேளா பிரச் சினைகளை முன்னதாகவே கண்டறிந்து தீர்வுகண்டால் நினைவாற்றல் குறைபாடு ஏற்படு வதை ஒத்திப்போடலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். சிங்கப்பூரர்களில் 60க்கும் அதிக வயதுள்ள முதியவர்களில் 60%க்கும் அதிக மக்களுக்கு ஏதோ ஒருவகை காதுகேளா குறைபாடு இருக்கிறது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழ கம் தெரிவித்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகமே இந்த ஆய்வை நடத்தியது. இங் டெங் ஃபோங் பொது மருத்து வமனையும் இவ்வாறே கூறு கிறது. ஆய்வில் 1,515 சிங்கப்பூரர் கள் உள்ளடக்கப்பட்டனர்.
அவர்களுக்கு வயது 55க்கும் அதிகம். சிங்கப்பூரில் 2030வது ஆண்டுவாக்கில் மக்களில் ஏறக் குறைய கால்வாசிபேருக்கு வயது 65க்கு மேல் ஆகிவிடும். 60க்கும் அதிக வயதுள்ளோரிடையே நினைவாற்றல் குறைபாடு உள்ள வர்களின் எண்ணிக்கை இப் போது சுமார் 10%. நினைவாற்றல் குறைபாட்டுக் கான பல காரணங்களில் காது கேளாத நிலையும் ஒன்றாகும். காதுகேளா குறைபாடு காரண மாக நினைவாற்றல் நோய் ஏற்படு வதில்லை என்றாலும் இந்த இரண்டுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

