50 மாதச் சிறை, $11மி. அபராதம்

50 மாதச் சிறை, $11மி. அபராதம்

1 mins read
d1b33317-4b34-4ce2-a8bc-103fc5e7e7b3
-
Google News Preferred Icon

கள்ள சிகரெட்டுகள் தொடர்பான குற்றங்களின் பேரில் பிணையில் வெளியே இருந்தபோது 58 வயது சிங்கப்பூரர் ஒருவர், கள்ள சிகரெட்டுகளை வைத்திருந்தார், அவற்றைக் கையாண்டார், அவற்றைச் சேர்த்துவைத்திருந்தார். இந்தக் குற்றங்களுக்காக டோங் சை ஹெங் என்ற அந்த ஆடவருக்கு 50 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. $11 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது. டோங் ஐந்து குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதர ஐந்து குற்றச்சாட்டுகள் கவனத்தில்கொள்ளப்பட்டன. நீதிமன்றம் விதித்த அபராதத்தைச் செலுத்தவில்லை. ஆதலால் டோங் மேலும் 31 மாதம் சிறையில் இருப்பார் என்று சிங்கப்பூர் சுங்கத்துறை நேற்று தெரிவித்தது.

சூன் லீ ஸ்திரீட்டில் இருக்கும் ஒரு பண்ணையில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளுடன் 2017 ஜூன் 2ஆம் தேதி டோங் சை ஹெங் கைதானார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்