வில்சன் சைலஸ்
வர்த்தக ரீதியாக அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்களின் மூலம் பொருளியல் மந்தநிலை மேம்படும் என நம்பிக்கை தெரிவித்த கல்வி மற்றும் தொடர்பு தகவலுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, சிங்கப்பூரர் களின் சம்பளங்களும் உயர வாய்ப்புகள் உள்ளது என்றார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்படவுள்ள பொருள், சேவை வரி குறித்துப் பேசிய அவர், அடுத்த தலைமுறைக்கான வர்த்தக வாய்ப்புகளை உரு வாக்குவதுடன் தொலைநோக்கு டன் வரவு செலவுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.
பெற்றோருக்கு அருகில் வீடு வாங்க விரும்பும் இளைய தம்ப திகளுக்கு வழங்கப்படும் கூடுதல் மானியங்களும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான உதவித் திட்டங்களும் பெரிதளவில் வர வேற்கப்பட்டாலும் 2021ஆம் ஆண்டு ஏழு விழுக்காட்டிலிருந்து ஒன்பது விழுக்காடாக உயர்த்தப்படவுள்ள பொருள், சேவை வரி, மக்களின் கவனத்தை இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகமாக ஈர்த்துள்ளது.
பொருள், சேவை வரி அதிகரிப் பால் வாழ்க்கை செலவினம் அதி கரிக்கும் என்றும் நடுத்தர வர்க்கத் தினரே பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்படுவர் என்றும் பல சிங்கப்பூரர்கள் கருதுவது நற் பணிப் பேரவை நேற்று ஏற்பாடு செய்த வரவு செலவுத் திட்ட கலந்துரையாடலில் எதிரொலித்தது. இத்துடன், வர்த்தக வாய்ப் புகள், சமூக உதவிகள் ஆகியவை தொடர்பான கேள்விகளையும் கலந்துரையாடலில் பங்கேற்ற அடித்தள தலைவர்கள் முன் வைத்தனர்.
கல்வி; தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, தொலைநோக்குடன் வரவு செலவுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். உடன் நற்பணி பேரவையின் துணைத் தலைவர் சித்தாரா துரைசாமி. படம்: நற்பணி பேரவை

