வரவு செலவுத் திட்டம்; லோ தியா கியாங் பாராட்டு

வரவு செலவுத் திட்டம்; லோ தியா கியாங் பாராட்டு

1 mins read
Google News Preferred Icon

எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சித் தலைவரான லோ தியா கியாங், இவ்வாண்டின் வரவு செலவு திட்டம் எதிர்காலத்திற் கானது என்று பாராட்டியிருக் கிறார். ஆனால் அதே சமயத்தில் வரவு செலவு திட்டத்தின் முக்கிய நோக்கத்திலிருந்து பொருள் சேவை வரி உயர்வு கவனத்தை சிதறடித்து விடுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இதை அரசாங்கம் அனு மதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நமது பிள்ளைகளின் உல கத்தை மாற்றக்கூடிய ஆசியா வுக்கு உலகப் பொருளியல் வலிமை இடம்மாறுவதையும் புதிய தொழில் நுட்பங்கள் பிரதான உலகப் போக்காக மாறுவதையும் வரவு செலவுத் திட்டம் துல்லிய மாக அடையாளம் கண்டுள்ளதாக வும் திரு லோ குறிப்பிட்டார்.

ஆனால் இதில் துரதிர்ஷ்ட மான அம்சம் என்னவெனில் இந்த வரவு செலவுத் திட்டம் அவசர அவசரமாக வருங் காலத்திற்கு ஏற்படக்கூடிய நிதி வரத்து குறித்த சிந்தனையில் முன்கூட்டியே பொருள் சேவை வரி உயர்வு பற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது. "இது, கவனத்தை சிதறடித்துள்ளது. ஏனெனில் வருங்கால பொருள் சேவை வரி உயர்வு குறித்து தற்போது விளக்க வேண்டியுள்ளது. "சிங்கப்பூரை தொலைநோக்கு பார்வையுடன் தலைமையேற்றுச் செல்ல கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்," என்றும் திரு லோ கூறினார்.