வசதி உள்ளவர்களுக்கும் வசதி குறைவானவர்களுக்கும் இடையிலான இடைவெளியை அரசாங்கத்தால் மட்டும் குறைக்க முடியாது என்றும் அதற்கு பெற்றோர், சமூகத்தின் ஒன்றுபட்ட முயற்சி தேவை என்றும் நியமன நாடாளு மன்ற உறுப்பினர் திரு கணேஷ் ராஜாராம் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாம் நாளாக நடைபெற்ற இவ்வாண்டின் வரவுசெலவு திட்ட விவாதத்தின்போது திரு கணேஷ் இதனைத் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் சிங்கப்பூரின் கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஆய்வு ஒன்றில் சிங்கப்பூரில் வசதி அடிப்படையில் சமுதாயத்தில் இடைவெளி அதிகமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அவர் சுட்டினார். இந்தப் பிரிவினை பற்றி கலந்துரையாடல்களும் விவாதங்களும் அண்மைய காலமாக அதிகரித்து வந்துள்ளன என்று கூறிய அவர், "இவ்வாண்டின் வரவு செலவு திட்டத்தில் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், இத்தகைய பிரிவைக் குறைக்க உதவும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.
கணேஷ் ராஜாராம். கோப்புப் படம்

