2016ல் நாடு முழுவதும் உருவான மொத்த கழிவுகளில் இரண்டு விழுக்காடு மட்டுமே தேசிய மறு சுழற்சி முயற்சிக்கு திரட்டப் பட்டது. இது, கழிவுகளைச் சேகரிக்கும் மற்ற முயற்சிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. அதே சமயத்தில் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் நபர்கள் உட்பட அதிகாரபூர்வமற்ற மறு சுழற்சி துறையில் ஒன்பது விழுக் காட்டுக்கு மேல் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய கணக்கீடுகளிலிருந்து இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது என்று நேற்று நாடாளுமன்றத்தில் புள்ளி விவரங்களை வெளியிட்டு பேசிய சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.
தேசிய மறுசுழற்சி திட்டத்தின் கீழ் எத்தனை 'டன்' மறுசுழற்சிப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன, அதற்கான செலவு எவ்வளவு என்று நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார். 2016ல் கழிவுகளைச் சேகரிப் பவர்கள் மூலம் மறுசுழற்சிக்கு சுமார் 44,200 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இது, அதே ஆண்டில் தேங்கிய 2.1 மில்லியன் டன் கழிவுகளுடன் ஒப்பிடுகையில் இரண்டு விழுக்காடு. ஒட்டுமொத்தமாக 435,600 டன் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி பயன்படுத்தப்பட்டது.

