அரசாங்க ஊழியர்கள் பயத்தால் அல்லது மனக்கலக்கத்தால் தைரி யமாகப் பேச முன்வருவதில்லையா? இது உண்மையல்ல என்றும், அரசாங்க ஊழியர்கள் ஏதேனும் தவறுகளை எடுத்துக்கூற அல்லது மேம்பாடுகளைப் பரிந்துரைக்க வழிமுறைகள் நடப்பில் இருப்பதாக வும் இரு அமைச்சர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்கள். அரசாங்க ஊழியர்கள் பிரச்சி னையில் மாட்டிக்கொள்ளும் என்ற பயத்தாலும், நடைமுறைகளை மேம்படுத்தும் முயற்சிகள் பயன ளிக்காது என்ற எண்ணத்தாலும் தைரியமாகப் பேச முன்வருவ தில்லை என்று செவ்வாய்க்கிழமை நடந்த வரவுசெலவுத் திட்ட விவா தத்தின்போது திரு லூயிஸ் இங் (நீ சூன் குழுத்தொகுதி) கூறி இருந்தார்.
நேற்று, துணைப் பிரதமர் டியோ சீ ஹியனும் கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங்கும் திரு இங்கின் கருத்துக் குப் பதிலளித்தனர். அரசாங்கச் சேவையின் புத் தாக்க முனைப்புகளை வழிநடத்தும் திரு ஓங், எல்லா நிலைகளிலுள்ள அரசாங்க ஊழியர்களும் மாற்றம் தங்களிடமிருந்து தொடங்குகிறது என்பதை உணரவேண்டும் என்றார். அமைச்சர் என்ற முறையில், துணிச்சலான, தெளிவான, அதி காரமுள்ள கொள்கை உத்தரவு களை ஊழியர்களுக்குத் தருகி றாரா எனத் தன்னைத் தானே கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.
மாற்றத்தை அரவணைக்கக் கூடிய முற்போக்கான கலாசாரத் தைக் கடைப்பிடிக்கும் செயலாற்றல் மிக்க அமைப்பை அமைத்திருக்கி றோமா என நிரந்தரச் செயலாளர் கள் அல்லது தலைமை நிர்வாகிகள் தங்களைக் கேட்டுக் கொள்வார் கள். அரசாங்கச் சேவையை அதிக செயலாற்றல்மிக்கதாக்கும் தங்க ளது பொறுப்புகளில் மேம்பாடுகள் செய்து, தங்களுக்குக் கீழே வேலை செய்வோருக்குத் தகுந்த அதிகாரமும் ஊக்கமும் அளித் திருக்கிறோமா என இயக்குநர்கள் தங்களிடம் கேட்டுக் கொள்வார் கள்.