ரொக்கமற்ற சமுதாயமாக மாறு வது வரியை வசூலிப்பதற்காக இல்லை என்று அறிவார்ந்த தேசம் திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விவியன் பாலகிருஷ் ணன் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கும் வர்த்தகங் களுக்கும் பரிவர்த்தனை செலவுக ளைக் குறைப்பதையே நோக்க மாகக் கொண்டு இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச் சர் விவியன் கூறினார்.
'பேநவ்' உடனுக்குடன் பண பரிவர்த்தனை செய்யும் முறையைப் பற்றியும் அவர் விளக்கமளித்தார். இதுவரை, ஒரு மில்லியனுக்கும் மேலான சிங்கப்பூரர்கள் அவர்க ளின் கைபேசி எண்களையோ அடையாள அட்டை எண்களையோ வங்கிக் கணக்கோடு இணைத்து உள்ளனர். $370 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை 'பேநவ்' மூலம் பரிவர்த்தனை ஆகியுள்ளது என்று அமைச்சர் விளக்கமளித் தார். இந்த மாதம் முதல் அரசு சார்ந்த அமைப்புகளும் 'பேநவ்' முறையைப் பயன்படுத்தும் என்று அமைச்சர் கூறினார்.

