அமைச்சர் சண்முகம் - சில்வியா லிம் இடையே காரசாரமான விவாதம்

அமைச்சர் சண்முகம் - சில்வியா லிம் இடையே காரசாரமான விவாதம்

1 mins read
a2f54e5a-5f3a-4102-b372-3c8201253524
-

வரவுசெலவுத் திட்டம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபோது சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் இரு வருக்குமிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. பொருள் சேவை வரியை அரசாங்கம் உயர்த்தவுள்ளதை நேர்மையற்ற செயல் என்று திருவாட்டி லிம் கூறுவதுபோன்ற கருத்தை தெரிவித்துள்ளார் என் றும் அது நேர்மையில்லாத செயல் என்றும் அமைச்சர் சாடினார். அவ்வாறு கூறிய கருத்தை திருவாட்டி லிம் மீட்டுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

வழக்கமாக நாடாளுமன்றத்தில் பேசுவதுபோல திருவாட்டி லிம் இந்த முறையும் பேசியுள்ளார் என்று திரு சண்முகம் சாடினார். அதற்கு பதிலளித்த திருவாட்டி லிம், அரசாங்கம் நேர்மையற்ற வகையில் நடந்து கொண்டதாகக் கூறவில்லை என்று தெரிவித்து உள்ளார். ஆனால் வரவுசெலவுத் திட்டத் தில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி உயர்வு அரசாங்கத்தின் நிலைப் பாட்டில் மாற்றத்தைக் காட்டுவ தாகவும் உண்மையிலேயே தமக்கு ஏற்பட்ட சந்தேகத்தில்தான், தாம் கருத்துரைத்ததாகக் கூறினார்.

சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் (இடம்), பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் இருவருக்குமிடையே நேற்று நாடாளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. தொலைக்காட்சிப் படங்கள்.