அமைச்சர்களின் சம்பளம் உயராது

அமைச்சர்களின் சம்பளம் உயராது

1 mins read
b7296e17-277a-4e9d-8d21-b843ca728ae6
-

அமைச்சர்களின் சம்பளத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது எனத் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் (படம்) நேற்று அறிவித்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது அவசியம் எழும்போது சம்பளம் மறுஆய்வு செய்யப்படும் என்றார் அவர். அமைச்சர்கள், பதவி வகிப் போர் ஆகியோரது சம்பளங்களை நிர்ணயிப்பதற்கான திட்டம் நடப் பில் இருப்பதாலும், பொருளியல் இன்னமும் மாறுநிலையில் இருப்ப தாலும் அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததாக வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அவர் குறிப் பிட்டார். சென்ற ஆண்டு அமைக்கப்பட்ட அமைச்சர்நிலை சம்பள மறு ஆய்வுக் குழு, அமைச்சர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான திட்டம் உகந்ததாகவும் சரியானதா கவும் இருப்பதாகத் தீர்மானித்த தாகத் துணைப் பிரதமர் டியோ தெரிவித்தார். ஆற்றலும் கடப்பாடும் மிக்க அரசாங்கத்திற்கான சம்பளங்கள் பற்றிய வெள்ளை அறிக்கை 2012ல் வெளியிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்ட அந்த வெள்ளை அறிக்கை யின் அடிப்படையில் தற்போதைய சம்பளத் திட்டம் வகுக்கப்பட்டது.