ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டம் விரிவாக்கப்படும்

ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டம் விரிவாக்கப்படும்

1 mins read

பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்த்தப்படும்போது குறைந்த, நடுத்தர வருமானமுள்ள குடும் பங்களுக்குக் கூடுதல் உதவி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் உறுதியளித்து உள்ளார். 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுவரை தக்க தருணத்தில் ஜிஎஸ்டி உயர்த்தப் படும்போது தற்போது நடைமுறையி லுள்ள ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டம் விரிவாக்கப்பட்டு வரி உயர்வு குடும்பங்களுக்குப் பெரும் பளுவாக அமையாதவாறு இருக்க உதவி நல்கப்படும் என்று அவர் கூறினார்.

குறைந்த, நடுத்தர வருமான முள்ள குடும்பங்களுக்கு வழங்கப் படும் நிரந்தர ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டம் விரிவாக்கப்படுவதோடு இடைநிலை உதவித் திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும். தற்போது இத்திட்டத்தின் கீழ் வீவக வீடுகளில் தங்கி இருப் போருக்கு $390 வரையிலான பயனீட்டுக் கழிவுகளும் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு $300 வரையிலான ரொக்கமும் குறைந்த வருமானமுள்ள முதி யோர்களுக்கு 'மெடிசேவ்' $450 வரையில் பணம் நிரப்பப்படுகிறது. ஜிஎஸ்டி உயர்வை முன்கூட்டியே மக்களுக்கு அறிவித்து அரசாங்கம் தனது நேர்மையைக் காட்டியுள்ள தாக அமைச்சர் கூறியுள்ளார்.