எஸ்எம்ஆர்டி ஊழியர்களுக்கு புதிய சீருடை

எஸ்எம்ஆர்டி ஊழியர்களுக்கு புதிய சீருடை

1 mins read

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் ரயில் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் வரும் திங்கட்கிழமை முதல் புதிய சீருடையில் காட்சி அளிப்பார்கள். இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு சீருடை மாற்றம் கண்டது. அடுத்த கட்டமாக இந்த ஆண்டின் மத்தியில் பேருந்து பிரிவில் பணிபுரியும் ஊழியர்களின் சீருடையும் மாற்றப்படும் என்று நிறுவனம் கூறியது. எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் அண்மைக் காலமாக ஏற்பட்டு வரும் மாற்றங்களில் இதுவும் ஒன்று.