என்டியு கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறு கேமரா

என்டியு கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறு கேமரா

1 mins read

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலுள்ள (என்டியு) உடல்குறையுள்ளோருக்கான கழிவறையில் சிறிய கேமரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது. கதவின் உட்புறத்தில் துணியை மாட்டும் இடத்தில் அந்த கேமரா இருந்ததாகவும் பெண்களை மானபங்கம் செய்த சம்பவம் குறித்து போலிசாருக்கு நேற்று முன்தினம் மாலை ஐந்து மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது. கேமராவில் தகவலை பதிவு செய்து வைக்கும் மெமரி அட்டை இருந்ததாகவும் ஆனால் அதில் ஏதேனும் புகைப்படங்களோ வீடியோ காட்சிகளோ இருந்ததாகத் தெரியவில்லை என்றும் கூறப்பட்டது.