விழிப்புடன் வாகனம் ஓட்டுமாறு நீதிபதி வேண்டுகோள்

விழிப்புடன் வாகனம் ஓட்டுமாறு நீதிபதி வேண்டுகோள்

1 mins read

கவனமின்றி வாகனம் ஓட்டி 79 வயது முதிய பாதசாரி லாவ் மோ கொய்யை மோதி அவருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற் காக முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆறு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்கான தடையும் 71 வயது திரு குவோக் கா குவொய்க்கு வழங்கப்பட்டுள்ளது. தண்டனை பிறப்பித்த நீதிபதி வாகனமோட்டிகள் சாலையில் அதிகப்படியான விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி காலை சுமார் 6.20 மணிக்கு நடந்த விபத்தில் மரின் பரேட் சாலையில் சாலை யைக் கடந்துகொண்டிருந்த மூதாட்டியை திரு குவோக் மோதி யுள்ளார். போக்குவரத்து விளக்கு கள் கார் செல்வதற்கான பச்சை விளக்கில் இருந்திருந்தாலும் மூதாட்டி சாலையைக் கடப்பதை பார்த்தும் திரு குவோக் அவரது காரின் வேகத்தை குறைக்க வில்லை. மேலும் விளக்குகளை வெளிச்சமாகக் காட்டிய அவர், நெருங்கி வந்தபோது 'ஹார்ன்' ஒலியை எழுப்பியுள்ளார்.