சிங்கப்பூரில் 2013 முதல் தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஒ) அடுக்குமாடி வீடு களை 3,300 ஒற்றையர்கள் பெற்று இருக் கிறார்கள். ஒற்றையர்களின் வீட்டுத் தேவையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் சீரான முன்னேற்றம் இடம்பெற்று வருவ தாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரி வித்து இருக்கிறது. சிங்கப்பூரில் 2013ஆம் ஆண்டுக்கு முன் மணமாகாத தம்பதியர் மறுவிற் பனைச் சந்தையில் இருந்து மட்டும்தான் வீடு வாங்க முடியும். இந்தச் சட்டத்தைப் பிறகு அரசாங்கம் மாற்றியது. முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளில், 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஒற்றையர்கள் புதிய வீவக அடுக்குமாடி வீட்டை வாங்குவதற்கு அரசாங்கம் 2013 முதல் அனுமதி அளித் தது.
2013 ஜூன் மாதம் ஈரறை வீவக அடுக்குமாடி வீட்டிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் சராசரி எண் ணிக்கை 57.5 ஆக இருந்தது. சென்ற ஆண்டு சராசரியாக சுமார் 5.9 விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவரும் ஈரறை வீவக வீட்டிற்கு மனுசெய்தனர். முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளில் கடந்த நான்கு ஆண்டு களில் ஈரறை அடுக்குமாடி வீடுகள் கிடைப்பது சீராக இருந்து வந்துள்ளது. ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக சுமார் 4,000 வீடுகள் அத்தகைய பேட்டை களில் கிடைத்ததாக கழகத்தின் பேச்சாளர் ஒருவர் விளக்கினார். புதிய வீடு கேட்டு வீவகவிடம் சுமார் 12,200 ஒற்றையர்கள் முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.

