பொதுச் சேவையில் 40 ஆண்டுகள்

1 mins read
da05f1c5-641c-4750-9980-282feccb2fc9
-

பாமர் சாலையில் அமைந்திருந்த அன்றைய சுகாதார அமைச்சின் அலுவலகத்திற்குள் 40 ஆண்டுக ளுக்கு முன் இதே வாரத்தில் பெரும் எதிர்பார்ப்புடனும் பதற்றத்து டனும் நுழைந்த அனுபவத்தை நினைவுகூர்ந்தார் போக்குவரத்து அமைச்சரும் உள்கட்டமைப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கோ பூன் வான். சிங்கப்பூர் அரசாங்கத்திலும் பொதுச் சேவையிலும் அவருக்கான தொடர்பு அன்று தொடங்கியது.

பொதுச் சேவையில் ஐக்கிய மாகி 40 ஆண்டுகளாகிய தருணத் தில் அவர் தமக்கு உறுதுணையாக இருந்துவரும் சிறந்த வழிகாட்டிக ளுக்கும் சக ஊழியர்களுக்கும் பெருமளவில் ஆதரவளித்துவரும் தமது குடும்பத்தினருக்கும் குறிப்பாக மனைவிக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண் டார். நன்றியுணர்வு குறித்த அழகிய ஓவியம் ஒன்றை தமது படிப்பகத்தில் வைத்துள்ளதைக் குறிப்பிட்ட திரு கோ, இத்தனை ஆண்டுகளாக தமக்கு மக்கள் வழங்கிய உதவிக்கு நன்றிக் கடனாக அவற்றை மீண்டும் மக்களுக்கு வழங்குவதைத் தமது வாழ்க்கைப் பாடமாகவும் குறிக்கோளாகவும் கொண்டுள்ள தாக அவர் தெரிவித்துள்ளார்.