சிறிய, நடுத்தர நிறுவனங்கள், புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவ னங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சிகளுக்கு ஊக்கமளிக்க அடுத்த மூன்று ஆண்டுகளில் $100 மில்லியன் வழங்கப்படவுள் ளது. தற்போது பெரிய நிறுவனங் களுக்கும் சிறிய, நடுத்தர நிறுவ னங்களுக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளுக்கு மட்டுமே அந்தத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஒருங்கிணைந்த உடன் பாட்டுத் திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடப்பிற்கு வரும்.
இந்தத் திட்டம் தற்போது நடப் பில் உள்ள நான்கு திட்டங்களை ஒருங்கிணைக்கும். பொருளியல் வளர்ச்சிக் கழகமும் எண்டர் பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் இணைந்து இந்தத் திட்டத்தை நிர்வகிக்கும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இணைந்து புத்தாக்கத் திறன் வளர்த்தல், அறிவுசார் பரிமாற்றம் உட்பட திறன் மேம்பாட்டிற்கும் வர்த்தக மேம்பாட்டிற்கும் ஆகும் செலவுகளில் 70 விழுக்காடு ஆதரவு இத்திட்டம் மூலம் வழங் கப்படும். நிறுவனங்களின் வளர்ச்சிக்கு திரு ஈஸ்வரன் மேலும் பல திட்டங் களை அறிவித்தார்.

