$380,000 பெறுமான பல மோசடிகள்; எட்டு பெண்கள் உள்ளிட்ட 14 பேரிடம் விசாரணை

$380,000 பெறுமான பல மோசடிகள்; எட்டு பெண்கள் உள்ளிட்ட 14 பேரிடம் விசாரணை

1 mins read

கிட்டத்தட்ட $380,000 பெறுமான பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பதினான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலிசார் தெரிவித்துள் ளனர். அவர்களில் எட்டுப் பேர் பெண்கள். அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரிகள் கடந்த புதன் கிழமையும் வியாழக்கிழமையும் நடத்திய சோதனையில் இந்த 14 பேரும் பிடிபட்டனர். அவர்கள் 15 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப் பட்டவர்கள். மோசடி, கள்ளப் பண பரி வர்த்தனை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களது அடையாள அட்டை எண், வங்கிக் கணக்கு எண்கள், ஒரு தடவை பெறப்படும் மறைச்சொற்கள் (ஓடிபி), குறுந்தகவல் சரிபார்ப்புக் குறியீடு உள்ளிட்டவைகளை யாரு டனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் இவ்வாறு தவிர்ப்பதன் மூலம் மோசடிகளில் சிக்காமல் தப்பிக்கலாம் என்றும் போலிசார் ஆலோசனை கூறி உள்ளனர்.