தமிழவேல் செய்தி ஆசிரியர்
செங்காங், ரிவர்வேல் கிரசென்ட் அருள்மிகு வேல்முருகன் ஞான முனீஸ்வரர் ஆலயத்தின் குட முழுக்குத் திருவிழா பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் முன் னிலையில் நேற்று மிக விமரிசை யாக நடந்தேறியது. சரியாக காலை 9.50 மணிக்கு குடமுழுக்கு சிறப் பாக நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான பக்தர் களை வழிநடத்த கிட்டத்தட்ட 800 தொண்டூழியர்களின் உதவியை ஆலய நிர்வாகம் நாடியது. ஐயா யிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு குடமுழுக்குத் திருக்காட்சியை கண்டு பக்திப் பரவசத்தில் மூழ்கினர். அருகி லுள்ள மூன்று சீனக் கோயில்களும் இடவசதி, தொண்டூழியர்கள், உணவுப் பொருள் விநியோகம் என பல உதவிகளைச் செய்து கைகொடுத்தன. சிங்கப்பூர் இந்து ஆலயங்களின் குடமுழுக்கு உள்ளிட்ட ஆலய விழாக்கள் அரசு, மக்கள், தொண் டூழியர்கள் அனைத்து சாராரின் ஒன்றிணைந்த முயற்சியுடன் நடைபெறுவது சிறப்பான ஒன்று என்றும் அது பார்ப்பதற்கு மிகவும் அருமையான காட்சி என்றும் குடமுழுக்குக்கு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் குறிப்பிட்டார்.
"தைப்பூசத்திற்கு சிங்கப்பூர் புத்த மடாலயமும் மற்ற சீனக் கோயில்களும் உதவி புரிகின்றன. அதுபோல இங்கு மூன்று சீனக் கோயில்களின் தொண்டூழியர்கள் குடமுழுக்கு விழாவில் உதவியுள் ளனர்.
குடமுழுக்கிற்குப் பின்னர் ஆலயத்தினுள் நடத்தப்பட்ட தீபாராதனை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

