ஜூரோங் பாய்ண்ட் கடைத் தொகுதிக்கு இவ்வாண்டின் தொடக்கத்தில் சென்றவர்கள் அங்கு நடத்தப்பட்ட சாலைக்காட்சி ஒன்றில் விலையுயர்ந்த காலணி களை அதிக தள்ளுபடி விற்ப னையில் வாங்கும் வாய்ப்பைப் பெற்றனர். அந்தப் பொருட்களை விற்ற கடைக் கூடாரத்தில் இருந்தவர்கள் தாங்கள் Liaison எனப்படும் புதிய நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் முன்னணி விற்பனை முத்திரையுடைய காலணிகளை எல்லாவித அளவுகளிலும் 30 வெள்ளிக்கு வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். அதனை நம்பிப் பலரும் பணம் கட்டினர். ஆனால், அவர்களுக்கு ஆச்சரியமே மிஞ்சியது. காரணம், அங்கு நடத்தப்பட்டது மோசடிக்கு எதிரான விழிப்புணர் வூட்டும் நிகழ்ச்சி. அதனை நடத்தியது போலிஸ்.
மலிவு விலை காலணி: மோசடிக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 mins read

