ஊழியர்களுக்கான வாழ்க்கைத் தொழில் சோதனைத் திட்டம்

ஊழியர்களுக்கான வாழ்க்கைத் தொழில் சோதனைத் திட்டம்

1 mins read

புதிய வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி, அது தங்களுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள வழிசெய்யும் திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வேலைப்பயிற்சிக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் $2,400 இரு மடங்காகவுள்ளது. 2016ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட வேலை சோதனைத் திட் டம் மேம்படுத்தப்பட்டு வாழ்க்கைத் தொழில் சோதனைத் திட்டம் என்று பெயர் மாற்றம் பெறுகிறது என்று மனிதவள இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று தெரிவித்தார். மூன்று மாதங்கள் வரை அர சாங்க செலவில் நிறுவனங்களும் ஊழியர்களும் ஒருவரை ஒருவர் மதிப்பீடு செய்ய துணைபுரியும் இந்தத் திட்டத்தால் சென்ற ஆண்டு 500 ஊழியர்கள் புதிய வேலைகளில் இருப்பதாக அவர் கூறினார். புதிய, மேம்பட்ட வேலைகளில் ஊழியர்கள் சென்று சேர்வதற்கு வாய்ப்புகள் அளிப்பதற்கும் இத் திட்டம் கைகொடுக்கும்.