சுயதொழில் செய்யும் நால்வரில் ஒருவர் மெடிசேவ் பங்களிப்புகளைப் போதுமான அளவு வைத்துக்கொள்வது இல்லை என்பதால் அவர்களின் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஓய்வுகாலத் தேவைகளுக்கு உதவும் வகையில் புதிய திட்டத்தை அவர்களுக்காக அறிமுகம் செய்ய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக மனிதவள இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
வருமானம் ஈட்டும்போதே பங்களிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் காணவுள்ளது. சுயதொழில் செய்வோரின் விவகாரங்களைப் பற்றி ஆராயும் முத்தரப்பு பணிக்குழு சமர்ப்பித்த பரிந்துரைகளில் இதுவும் ஒன்று. அதை அரசு அமல்படுத்தவுள்ளது. மேலும் அவர்கள் நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்பட்டால் வருமானத்தை இழக்க நேரிடும் பட்சத்தில் அதை ஈடுகட்டும் காப்புறுதி திட்டம் தற்போது இல்லாததால் அதுவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக திருவாட்டி டியோ தெரிவித்துள்ளார்.

