கல்வி அமைச்சின் நிதி ஆதரவுத் திட்டங்கள் மூலம் மேலும் 10,000 மாணவர்கள் இந்த ஆண்டு பயன் பெறுவார்கள். இவர்களையும் சேர்ந்து அமைச் சின் நிதி ஆதரவுத் திட்டங்களின் வழி பயன்பெறுவோரின் எண் ணிக்கை ஆண்டுக்கு 90,000க்கு உயர்ந்துள்ளது. தொடக்கநிலை முதல் பல் கலைக்கழக புகுமுக வகுப்புகள் வரையிலான வசதி குறைந்த மாணவர்கள் இந்த நிதி உதவித் திட்டங்கள் மூலம் தகுதி பெற அவர்களின் குடும்பங்களின் வரு மான வரம்பு உயர்த்தப்படும் என்று கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மாதாந்திர மொத்த குடும்ப வருமானம் $2,500லிருந்து $2,750க்கும் தனிநபர் மாத வரு மான வரம்பு $625லிருந்து $690க் கும் உயர்த்தப்படும்.
பல்கலைக்கழக புகுமுக வகுப்பு மாணவர்களின் வருடாந்திர கல்வி உதவி நிதியின் வரம்பு $750லிருந்து $900க்கு உயரும். இந்த மாற்றங்களால் 6,000க்கு மேற்பட்ட சிங்கப்பூர் மாணவர்கள் பயன்பெறுவார்கள். அடுத்த மாதத்திலிருந்து, பள்ளி உணவுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வாரத் துக்கு பத்து முறை உணவு வழங்கப்படும் என்றும் திரு இங் கூறினார். தற்போது ஏழு முறை உணவு வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இதர நிதி உதவித் திட்டங்கள் உட்பட மாண வர்களுக்கான இந்தத் திட்டங்க ளுக்காக அரசாங்கம் ஆண்டுக்கு $100 மில்லியன் செலவழிக்கும் என்றும் அமைச்சர் மேலும் சொன் னார்.

