ஆகாயப் படை பொன் விழா: மாணவர்களுடன் பகிர்வு

ஆகாயப் படை பொன் விழா: மாணவர்களுடன் பகிர்வு

1 mins read
fe2ff256-81e4-4b71-a487-2664dee38564
-

சிங்கப்பூர் ஆகாயப் படை அதன் ஐம்பதாவது ஆண்டு விழாவை இந்த ஆண்டு கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு ஆகாயப் படை பற்றிய தகவல்களைத் தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் எடுத்துரைக்கும் திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகாயப் படை தொடர்பான நூல்களை மாணவர்களிடம் விநியோகிக்கவும் அவர்களுடன் இதர நடவடிக்கைகளில் ஈடுபடவும் மேஜர் குர்தீப் கவுர் கில் (படம்) சிங்னான் தொடக்கப் பள்ளிக்கும் ஃபர்ஸ்ட் தோ பாயோ தொடக்கப்பள்ளிக்கும் சென்றார். ஆகாயப் படையின் தூதரான மேஜர் கவுர் ஃபர்ஸ்ட் தோ பாயோ தொடக்கப்பள்ளியின் இரண்டாம் வகுப்பு மாணவர் களிடம் புத்தகம் வாசித்தார். காகித விமானங்களைச் செய்யவும் கற்றுக்கொடுத்தார். இந்தத் திட்டத்தில் 10 அதிகாரிகளும் 60 மாணவர் களும் ஈடுபட்டனர். படம்: தி நியூ பேப்பர்