இந்தோ. பணிப்பெண்ணுக்கு எட்டு மாதச் சிறைத் தண்டனை

இந்தோ. பணிப்பெண்ணுக்கு எட்டு மாதச் சிறைத் தண்டனை

1 mins read

நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்ட 89 வயது மூதாட்டி ஒருவரை தொடர்ச்சியாகத் தாக்கியதாக இந்தோனீசியப் பணிப்பெண் ஒருவருக்கு நேற்று நீதிமன்றம் 8 மாதச் சிறைத் தண்டனை விதித்தது. ஏசனா எலிசபெத் டோலியாப் என்ற 30 வயதுப் பணிப்பெண் மூதாட்டி திருமதி மேரி டானின் இடது கண்ணில் தனது விரலால் குத்தி காயம் ஏற்படுத்தி யிருக்கிறார். இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே நிகழ்ந்துள்ளது.

மூதாட்டியின் கண்கள் சிவந்து காணப்பட்டதையும் முகத்தில் கீறல்கள் இருப்பதையும் அவரது பேத்தியால் அறியப்பட்டதால் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. நீதிமன்றத்தில் ஏசனா தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒத்துக் கொண்டார். செங்காங்கில் வீவக அடுக்குமாடி வீட்டில் வசித்து வரும் அந்தக் குடும்பத்தில் கடந்த ஒரு மாத காலமாகப் பணிபுரிந்து வந்தார். நோய்வாய்ப் பட்ட மூதாட்டி டானுக்கு உடை மாற்றுவது, குளிப்பாட்டுவது, உணவு ஊட்டி விடுவது போன்ற பணிகளை அவர் செய்து வந்தார்.

கண்களிலும் முகத்திலும் காயம் ஏற்படுத்தியதோடு மட்டு மன்றி அவரது மார்பகம், இடுப்புக்குக் கீழ்ப் பகுதியிலும் பின்பகுதியிலும் காயம் ஏற்படும் வகையில் பலமுறை அழுத்த மாகக் கிள்ளி யதையும் ஒத்துக்கொ ண்டார். அந்த மூதாட்டி தன்னை 'முட்டாள்' என்று அழைத்ததற் காக வும் சில சமயங்களில் அவ ரது விரலால் மெதுவாகத் தலையில் குத்தி தள்ளிவிடு வதாலுமே தான் இவ்வாறு செய்ததாக அவர் விசாரணையில் தெரிவித்தார்.