சின் ஸ்வீ ரோட்டுக்கு அருகேயுள்ள ஜாலான் குக்கோவில் எஸ்எம் ஆர்டி வாடகை உந்து வண்டி ஒன்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆறுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளிய பின், அங்கிருந்த நடைமேடையில் ஏறி நின்றது. திறந்தவெளி கார் நிறுத்தும் இடத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் உந்து வண்டி ஓட்டுநர், தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை வாசகர் ஒருவர், ஸ்டோம்ப் இணையத் தளத்தில் பதிவேற்றியிருந்தார். படம்: ஸ்டோம்ப்
மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளி நடைமேடையில் ஏறிய டாக்சி
1 mins read
-

