இன்னும் மூன்று ஆண்டுகளில், பழைய கைபேசிகளையும், சலவை இயந்திரங்களையும், மற்ற மின்னி யல் சாதனங்களையும் மறுசுழற்சி செய்வது பயனீட்டாளர்களுக்கு எளிதாகிவிடும். அதிகமான கடை கள் மறுசுழற்சித் தொட்டிகளை அல்லது பொருளைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் சேவைகளை வழங்கவிருக்கின்றன. 2021ஆ-ம் ஆண்டுக்குள், மின் னி யல், மின்னணு சாதனங்களின் உற்பத்தியாளர்களும் இறக்குமதி யாளர் களும் தங்களது தயாரிப்பு கள் பயன்பாட்டுக் காலத்தின் முடிவை அடையும்போது சேகரிக் கப்பட்டு, முறையாக மறுசுழற்சி செய்யப்படுவதை அல்லது வீசப் படுவதை உறுதிப்படுத்த வேண் டும்.
உற்பத்தியாளரின் பொறுப்பு நீட்டிப்பு அணுகுமுறை என்றழைக் கப் படும் இந்த உத்தி, சுவீடனிலும் டென்மார்க்கிலும் அமலாக்கப் பட்டுள்ளது. இங்குள்ள பெரிய மின்னியல் சாதனக் கடைகளான கோர்ட்ஸ், ஹார்வி நோர்மன், கெய்ன் சிட்டி ஆகியன தங்களது கடைகளில் மின்-குப்பை மறுசுழற்சித் தொட்டிகளை நிறுவ சம்மதித் திருப்பதாகச்சுற்றுப் புற, நீர்வள அ மை ச் சி ன் வரவுசெலவுத் திட்ட வி வா த த் தி ன் போ து மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் நேற்று தெரி வித்தார்.
மின்னணு குப்பைத் தொட்டி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

