தண்ணீருக்கான பயனீட்டுக் கட்ட ணம் உயர்த்தப்பட்டதை அடுத்து அதன் பயன்பாட்டை மக்கள் குறைத் துக் கொண்டுள்ளனர். 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகை யில் தண்ணீர்ப் பயன்பாடு, கடந்த ஆண்டில் தலைக்கு ஐந்து லிட்டர் குறைந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் தனி நபருக்கான பயன் பாட்டில் அரசாங்கம் கொண்டிருந்த இலக்கை இது தாண்டியுள்ளது. 2016ஆம் ஆண்டில் ஒரு வருக்கு 148 லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டது. கடந்த ஆண்டில் அது 143 லிட்டராகக் குறைந்துள் ளது. இதனை நாடாளுமன்றத்தில் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று தெரிவித்தார்.
ஒருவருக்குத் தேவைப்படும் 148 லிட்டர் தண்ணீரை 2020ஆம் ஆண்டுக்குள் 147 லிட்டராகவும் 2030ஆம் ஆண்டுக்குள் 140 லிட்டராகவும் குறைக்க அரசாங்கம் இலக்கு கொண்டிருந்தது. ஆனால் அந்த இரண்டு இலக்குகளில் ஒன்றை நாம் எட்டிவிட்டோம் என்று அமைச்சர் தெரிவித்தார். கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் தண்ணீர்ப் பயன்பாட்டுக்கு, கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட தண்ணீர்ப் பயனீட் டுக் கட்டணமே காரணம் என்று தெரிகிறது. நாடாளுமன்றத்தில் மரின் பரேடு குழுத்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் சியா கியான் பெங், தண்ணீர்ப் பயனீட்டுக் கட்டண உயர்வு பலன் தந்துள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளிக்கை யில் இவ்வாறு அமைச்சர் மசகோஸ் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின்போது தண்ணீர்க் கட்டணம் 30 விழுக்காடு உயர்த் தப்படும் என்றும் அது இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தண்ணீர்ப் பயனீட் டுக் கட்டணம் முதல் கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் உயர்த்தப்பட்டது. இரண்டாவது கட்ட கட்டண உயர்வு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடைமுறைப்படுத்தப்ப டும். தண்ணீர்ப் பயனீட்டுக் கட்ட ணத் தின் உயர்வால் கிடைக்கும் பணம் சிங்கப்பூரின் தண்ணீர்க் கட்டமைப்பைப் பராமரித்தல், கடல் நீரை நன்னீராக்குதல் போன்ற திட் டங்களுக்கும் பயன்படுத்தப் படும் என்று அரசாங்கம் அறிவித்தி ருந்தது. தண்ணீர்ப் பயன்பாட்டின் அளவு குறைந்ததற்கு பயன்பாட்டுக் கட்டண உயர்வு மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. தண்ணீ ரைச் சேமிப்பதற்கு பொதுப் பயனீட் டுக் கழகம் மேற்கொண்ட சில திட்டங்களும் காரணம் என்று அமைச்சர் மசகோஸ் கூறினார்.