இளம் தம்பதிகளுக்கு விரைவில் வீவக வீடு

1 mins read
111134c9-4ff0-40cf-b77e-703a90ffac83
-

முதல் வீடு வாங்க அதிகமான இளம் தம்பதிகளுக்கு உதவும் வகையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) 2019ல் இரு மடங்கு அதிக வீடுகளை விற் பனைக்கு விட்டு, காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவிருக் கிறது. அதோடு, முதலில் வீட்டுக்கு விண்ணப்பம் செய்துவிட்டு, சாவியைப் பெற்றுக்கொள்ளும் காலம் வரை வருமான மதிப் பீட்டை ஒத்திப் போடவும் வீவக அனுமதிக்கும். இதன்வழி, இளம் தம்பதிகள் சேமிப்பைப் பெருக்கிக் கொண் டிருக்கையில் முன்கூட்டியே வீட் டைப் பெற இயலும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளு மன்றத்தில் கூறினார்.

அடுத்த ஆண்டு விற் பனைக்கு வரும் சுமார் 2,000 வீடுகளின் காத்திருப்புக் காலம் இரண்டு முதல் மூன்று ஆண்டு களாக இருக்கும் என்றார் திரு வோங். வழக்கமான மூன்று முதல் நான்கு ஆண்டுகளைவிட இது குறைவு. இவ்வாண்டு, இது போன்ற குறைவான காத்திருப்புக் காலம் கொண்ட 1,100 வீடுகள் செம்பவாங், செங்காங், யீ‌ஷூன் ஆகிய வட்டாரங்களில் விற்பனைக்கு வரும். காத்திருப்புக் காலத்தை மேலும் குறைப்பதற்கான வழி வகைகளைத் தனது அமைச்சு ஆராய்வதாக திரு கான் தியாம் போவிடம் (அங் மோ கியோ குழுத்தொகுதி) திரு வோங் கூறினார். ஆனால், சில நிலப்பகுதிகள் தயாராக இல்லாத காரணத்தால் எல்லா வீடுகளுக்கும் காத் திருப்புக் காலத்தைக் குறைப்பது சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்தார்.