தனியார் வாடகை கார் சேவைக்கான விதிமுறைகள் பரிசீலனை

தனியார் வாடகை கார் சேவைக்கான விதிமுறைகள் பரிசீலனை

1 mins read
61b45f4d-2689-4c2d-b565-dbd03582b272
-

வாடகைக் கார் சேவைகள் வருங் காலத்தில் ஒழுங்குவிதிகளுக்கு உட்படுத்தப்படலாம். மேலும் அவற்றை உரிமம் மூலம் கட்டுப் படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. அந்தத் துறை வளர்ச்சி கண்டுவரும் நேரத்தில் பயணிகள், ஓட்டுநர் ஆகியோரின் நலனைப் பாதுகாக்கப் போதுமான சட்டவிதி களை அரசாங்கம் கொண்டிருப்பது அவசியமாகிறது என்று போக்கு வரத்து இரண்டாம் அமைச்சர் இங் சீ மெங் கூறினார்.

தற்போதைய அடிப்படை விதிமுறைக் கட்டமைப்பு சில வரம்புகளைக் கொண்டிருப்பதோடு கைபேசிச் செயலி மூலம் இயக்கப்படும் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கும் அவர்களின் வாகனங்களுக்கும் உரிமம் இருக்க வேண்டும் என் பதை மட்டும் வலியுறுத்துகின்றன. "இனிமேல் அந்தக் கைபேசிச் செயலி மூலமான பயணச் சேவை களுக்கும் உரிமத்தை அறிமுகம் செய்வது எப்படி என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. பயணிகள், ஓட்டுநர்கள், சிங்கப்பூ ரின் விரிவான போக்குவரத்து அமைப்பு போன்றவற்றின் தேவை களைப் பூர்த்தி செய்யும் வகையில் வாடகைக் கார் சேவை துறை வளருவதை உறுதி செய்வதற்கான பல்வேறு விதமான ஒழுங்கு விதிகள் அந்த ஆய்வில் உள்ளன," என்றார் அமைச்சர்.

வாடகைக் கார் சேவை. கோப்புப் படம்: ஊடகம்