எம்ஆர்டி ரயில்தட மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதி ஜூன் மாதம் நிறைவடையும்

எம்ஆர்டி ரயில்தட மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதி ஜூன் மாதம் நிறைவடையும்

1 mins read
97c0f1b8-0189-4e0f-8423-7963dfc0d1ff
-

வடக்கு=தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் தடங்களின் பெரிய மேம்பாட்டுப் பணிகளில் பாதி இவ் வாண்டின் நடுப்பகுதியில் நிறைவு பெறும் என்றும் எஞ்சிய பணிகள் 2020ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதியில் முடிவுறும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதுபோன்ற மேம்பாட்டுப் பணி களை மேற்கொள்ளும் பொறியாளர் களுக்குக் கூடுதல் நேரம் கொடுக் கும் வகையில் ரயில் சேவை முன்கூட்டியே முடிக்கப்படுவதை யும் தாமதமாகத் தொடங்கப்படு வதையும் பயணிகள் எதிர்நோக்க வேண்டி இருக்கும். ஜூன் மாதத் திற்குப் பின்னரும் இந்த நிலைமை நீடிப்பதை அவர்கள் எதிர்பார்க் கலாம்.

மொத்தம் செய்து முடிக்கப்பட வேண்டிய ஆறு பெரிய புதுப்பிப்புத் திட்டங்களில் மூன்று அடுத்த சில மாதங்களில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வந்த தண்டவாளக் குறுக்குச் சட் டங்களை மாற்றும் பணியும் மூன் றாவது தண்டவாளப் பாதைக்கு மின் விநியோகிக்கும் பணியும் முடிக்கப்பட்டுவிட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை யில் தெரிவித்தன.

செயல்பட்டு வரும் ரயில் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுள் ஒன்று. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்