புக்கிட் பாஞ்சாங் (எல்ஆர்டி) இலகு ரயில் சேவையைப் பயன் படுத்துவோர் 2022ஆம் ஆண்டு முதல் மேலும் கூடுதல் நம்பத் தகுந்த பயணங்களை எதிர்பார்க்க லாம். பெரிய அளவிலான பழுது பார்ப்புப் பணிகள் அப்போது நிறை வடைந்துவிடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. 19 ஆண்டு கால எல்ஆர்டியை புதுப்பிப்பதற்கான $344 மில்லியன் திட்டம் பற்றிய விவரங்களை அரசாங்கம் வெளி யிட்டுள்ளது. புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி தனது பயனுள்ள சேவையின் இறு தியை நெருங்கிவிட்டதாக தமது அமைச்சின் மீதான நிதி ஒதுக் கீட்டு விவாதத்தின்போது போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்தார். 1999ஆம் ஆண்டு 14 நிலையங்களுடன் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து அதன் மீதான நம்பகத்தன்மை ஒரு சர்ச்சையாக இருந்து வந்தது.
கடந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் ஆறு முறை அந்த எல்ஆர்டி சேவையில் தடங்கல்கள் ஏற்பட்டன. அவை ஒவ்வொன்றும் 30 நிமிடங்களுக்கு மேலான பயண தாமதத்தை ஏற்ப டுத்தின. இவ்வாண்டின் முதல் பாதியில் தொடங்க இருக்கும் அந்த புதுப்பிப்புத் திட்டம் தற்போதைய சமிக்ஞை முறையை மேம்படுத்து வதை உள்ளடக்கி இருக்கும். அதிக துல்லியமான தகவல் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு முறையும் ஏற்படுத்தப் படும் ரயில் வேகத்தை சிறப்பான முறையில் கட்டுப்படுத்த அது உதவும்.

