யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெறும் முதல் கலாசார மரபுடைமை அம்சத்தை அடையாளம் காண நடவடிக்கை

யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெறும் முதல் கலாசார மரபுடைமை அம்சத்தை அடையாளம் காண நடவடிக்கை

1 mins read

யுனெஸ்கோ அமைப்பின் புல னாகா கலாசார மரபுடைமை பிரதி நிதிப் பட்டியலில் இடம்பெறப் போகும் முதல் சிங்கப்பூர் அம்சம் எது என்பதை அறிய சிங்கப் பூரர்கள் ஆர்வமாக உள்ளனர். கடந்த மாதம் 22ஆம் தேதி பாதுகாக்கப்பட வேண்டிய புல னாகா கலாசார மரபுடைமைக்கான யுனெஸ்கோ மாநாட்டிற்கு சிங்கப்பூர் ஒப்புதல் அளித்தது. கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சரான கிரேஸ் ஃபூ, நாடாளுமன்றத்தில் தமது அமைச் சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவா தத்தின்போது இந்தத் தகவலை வெளியிட்டார். அப்பட்டியலில் இடம்பெறப்போ கும் முதல் அம்சம் எது என்பதை அடையாளம் காணும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எது முக்கியமான புலனாகா கலாசார மரபுடைமை என்று சிங்கப்பூரர்களிடம் தேசிய மரபு டைமைக் கழகம் இவ்வாண்டு தொடக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தியது. அவர்களில் சிலர், சிங்கப்பூர் உணவங்காடிகளில் கிடைக்கும் ரோஜாக், பக் குத் தே, தோசை அல்லது சா குவே தியாவ் ஆகியவற்றைப் பரிந்து ரைத்தனர். கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 7,300 பேரில் 27 விழுக் காட்டினர் உணவுப் பொருளையே தங்களின் தெரிவாகக் குறிப்பிட் டனர். சமூக நடைமுறைகள், திரு விழாக்கள், பாரம்பரியக் கலைகள் ஆகியவை 18 விழுக்காட்டினரின் தெரிவாக இருந்தது.