'பட்ஜெட்' விவாதத்தின் முடிவில் தமிழில் பேசிய நாடாளுமன்ற நாயகர்

1 mins read
1d727de7-3480-444c-ba1c-75ef5a0d2255
-

தமது முதல் வரவு செலவுத் திட்ட விவாத முடிவுரையில் "இது ஒரு பல மொழி நாடாளுமன்றம். என் னாலும் தமிழ் பேச முடியும்," என்று தமிழில் பேசினார் நாடாளு மன்ற நாயகர் டான் சுவான் ஜின் (படம்). அவர் 'மொழிப் போட்டியில்' இறங்கி மன்றத்தில் சிரிப்பலையை எழுப்பினார். மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் இரு முறை தமிழில் பேசியதைக் குறிப்பிட்ட திரு டான், தானும் பிறகு தமிழில் பேசினார். வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்பது தமது விருப்பமாக இருந்தபோதும் அதில் பங்கேற்க முடியாததுதான் பெரிய சவாலாக இருந்தது என்ற அவர், "இறுதியாக எனக்கு வாய்ப்புக் கிடைத்தது, ஆண்டுக்கு ஒருமுறை வருவது," என்று நகைச்சுவையோடு தமது 10 நிமிட உரையை அவர் தொடங்கினார்.

இந்த முடிவுரையில் பேச தமக்கு வாய்ப்புக் கிடைத்தது பற்றிக் குறிப்பிட்ட திரு டான், கருத்தியலுடன் செயல்படுவது ஒருபுறம் இருந்தாலும் நடைமுறை சாத்தியத்துடன் செயல்பட வேண்டிய அவசியம் குறித்து இந்த விவாதத்தில் எழுந்த கருத்தைக் குறிப்பிட்டார். நாட்டின் குறிக்கோள்கள், அபிலாஷைகளை நோக்கிய பாதை யில் நடைமுறை சாத்தியத்துடன் செயல்பட வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்திய அவர், விவாதத்தில் துடிப்போடு பங்கேற்ற உறுப்பினர்களைப் பாராட்டினார். சிரமமான, வரவேற்பில்லாத தேர்வுகளுடன் சிலதை விட்டுகொடுக்க வேண்டியது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.