தனது இணையத்தளப் படங்களை '99.கோ' நிறுவனம் அனுமதி பெறாமல் பயன்படுத் தியதால் காப்புரிமை விதியை மீறிவிட்டது என்று 'புரோப் பர்ட்டி குரு' நிறுவனம் தொடுத்த வழக்கு நேற்று தோல்வி அடைந்தது. சொத்துகளின் படங்களை சொத்து முகவர்கள் 'புரோப்பர்ட்டி குரு' நிறுவன இணையத் தளத்தில் பதிவேற் றம் செய்தனர். அந்தப் படங்கள் மூன்றாம் தரப்பு செயலியைப் பயன்படுத்தி, '99.கோ' நிறுவனத்தின் இணையத் தளத்துக்கு மாற் றப்பட்டன. வழக்கின் தீர்ப்பை வெளி யிட்ட நீதிபதி ஹூ ஷியு பெங், "படத்தைப் பிரதி எடுத் தல், பெரிதாக்குதல், அளவை மாற்றுதல் ஆகியவை காப்பு ரிமைச் சட்டத்தை மீறும் செயல்களாகக் கருதப்படாது என்றார். தீர்ப்பு குறித்து பேசிய '99.கோ' நிறுவனர் டேரியஸ் சியுங், இது இணையத்துக்கு கிடைத்த வெற்றி," என்றார்.
'புரோப்பர்ட்டிகுரு' நிறுவன காப்புரிமை வழக்கு தோல்வி
1 mins read

