மத்திய போலிஸ் பிரிவு நடத்திய மூன்று நாள் சோதனை யில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் சூதாட்டம், பாலியல் சேவைகள் உட்பட பல்வேறு குற்றங்க ளுக்காகப் பிடிபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை லிட்டில் இந்தியா, ஜாலான் புசார், சைனா டவுன், தியோங் பாரு ஆகிய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட் டன. அதில் ஹோட்டல்களிலும் வாடகை வீடுகளிலும் பாலியல் சேவை வழங்கியதற்காக 18 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் அல்லது குறுகிய கால வருகை அனுமதியில் சிங்கப்பூரில் தங்கியி ருந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. இதர 9 ஆண்களும் 9 பெண்களும் சூதாட்டம் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட னர். அவர்களிடமிருந்து $1,438 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
சூதாட்டம், பாலியல் சேவைகள் போன்ற குற்றங்களுக்காக 36 பேர் கைது
1 mins read

