சுற்றுலா வழிகாட்டியான மாதை நோக்கி பேருந்து ஓட்டுநர் ஒருவர் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதால் மூண்ட வாக்குவாதம் பின்னர் இருவருக்குமிடையே கைகலப்பாக மாறியது. அதன் காரணமாக 38 வயது சுற்றுலா வழிகாட்டி யும் 58 வயது பேருந்து ஓட்டுநரும் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கைகலப்பில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டதால் அவர்கள் இருவரையும் டான் டோக் செங் மருத்துவ மனைக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ வாகனம் கொண்டு சென்றது.
கைகலப்பில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநரும் சுற்றுலா வழிகாட்டியும் கைது
1 mins read

