மாணவியைத் துன்புறுத்திய சம்பவம்: ஏழு இளையர்களிடம் விசாரணை

1 mins read

ஓர் இளம் பெண்ணைத் துன்புறுத்திய சம்பவம் போலிசில் புகார் கொடுக்கப்பட்டதன் தொடர்பில் ஏழு இளையர்கள் போலிஸ் விசாரணைக்கு உதவி வருகின்றனர். பெண் கள் இருவர் நடைபாதையில் அமர்ந்திருந்த கறுப்பாடை அணிந்திருந்த மற்றொரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருப் பதுபோல ஒரு காணொளி இணையத்தின் பதிவேற்றம் செய்யப்பட்டது. திடீரென, இரண்டு பெண்களில் ஒருவர் கறுப்பு ஆடை அணிந்திருந்த பெண்ணை அறைந்தார். இடப்பக்கத்தில் 'டன்மன் செக்' எனும் பள்ளியின் மேலாடை அணிந்திருந்த மற்றொரு பெண்ணும் தாக்குதலில் சேர்ந்துகொண்டார்.

இச்சம்பவம் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி நடந்தது என்று ‌ஷின்மின் சீன நாளிதழ் கடந்த புதன்கிழமை செய்தி வெளி யிட்டிருந்தது. தாக்குதலுக்கு ஆனான பெண்ணுக்கு 15 வயது என்றும் அந்தக் காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து அந்தப் பெண் இந்த வாரத்தில் போலிசில் புகார் கொடுத் தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தங்களிடம் புகார் கொடுக்கப் பட்டுள்ளது என்றும் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு 15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட ஏழு பதின்மவயதினர் உதவி வருகின்றனர் என்றும் போலிஸ் உறுதிப்படுத்தியது. அவர் களில் ஐவர் பெண்கள், இருவர் ஆண்கள். அவர்கள் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.