முஹம்மது ஃபைரோஸ்
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை அதன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களை வீடமைப்புப் பேட்டைகளுக்கு கொண்டு சென் றுள்ளது. தோ பாயோவில் உள்ள 'ஹெச்டிபி ஹப்'பில் நேற்று நடைபெற்ற கொண்டாட்டங்களை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென். 'RSAF50@Heartlands' என்று அழைக்கப்படும் இந்தக் கொண்டாட்ட நடவடிக்கைகளில் ஹெச்டிபி ஹப்பில் இவ்வாரயிறு தியில் கிட்டத்தட்ட 50,000 பேர் திரள்வர் என எதிர்பார்க்கப்படு கிறது. இந்த நடவடிக்கைகள் பின் னர் செம்பவாங், பொங்கோல், ஜூரோங் ஈஸ்ட், பிடோக் ஆகிய வீடமைப்புப் பேட்டைகளுக்கு இடம் மாறும். இந்த கண்காட்சிகளுக்கு வருகை புரிவோர் சிங்கப்பூர் குடி யரசு ஆகாயப் படையின் வீரர் களுடன் கலந்துறவாடலாம். அத் துடன், அங்கு காட்சிக்கு வைக்கப் பட்டுள்ள விமானங்களையும் ஆயு தங்களையும் நேரில் காண்பதன் மூலம் பொதுமக்கள் ஆகாயப் படையின் ஆற்றல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை வீரரான 'எம்இ3' சாந்தி தனபால், நேற்று தோ பாயோவில் நடைபெற்ற கண்காட்சிக்கு வந்திருந்த சிறுவனுக்கு ஆகாயப் படையின் நடவடிக்கை நூலில் உள்ள முப்பரிமாண படத்தைக் காண்பிக்கிறார். படம்: தற்காப்பு அமைச்சு

