இந்திய குறும்படங்களை ஆவணப்படுத்த இணைய காப்பகம்

இந்திய குறும்படங்களை ஆவணப்படுத்த இணைய காப்பகம்

1 mins read
4fcd5fec-375e-42f5-a072-11691cc2a19a
-

முஹம்மது ஃபைரோஸ்

சிங்கப்பூரில் தயாரிக்­கப்­பட்ட இந்திய குறும்­படங்களை ஆவணப் படுத்த theindbox.sg எனும் இணைய காப்பகத்தை 'சிட்ஃபி' எனப்படும் சிங்கப்பூர் இந்திய நாடகக் கலை, திரைப்பட ஆர்வலர்கள் மன்றம் தொடங்கி யுள்ளது. தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் பஞ்சாபி, உருது உள்ளிட்ட எந்த இந்திய மொழியிலும் சிங்கப்பூரில் எடுக்கப் பட்ட அனைத்து குறும்­படங்களும் இந்த இணையத்தளத்தில் சேமிக் கப்படும் என்றார் சிட்ஃபியை தோற்றுவித்தவரும் அதன் இயக்கு நருமான திரு சலீம் ஹாடி, 36. இந்த இணைய காப்பகத்தில் சிங்கப்பூர் இந்தியர்களின் அடை யாளங்களும் குரல்களும் எதிர் காலத் தலைமுறையினருக்காக பாதுகாக்கப்படும் என்றார் அவர்.