2016ல் இருவர் கொல்லப்பட்ட ரயில் விபத்து: எஸ்எம்ஆர்டி பொறியாளருக்கு நான்கு வாரச்சிறை

2016ல் இருவர் கொல்லப்பட்ட ரயில் விபத்து: எஸ்எம்ஆர்டி பொறியாளருக்கு நான்கு வாரச்சிறை

1 mins read
e27c9205-49f2-44d7-948c-039cdf6884f1
-

பெருவிரைவு ரயில் தண்டவாளத் தடத்திற்குள் 15 பேர் கொண்ட ஊழியர் குழுவை அழைத்துச் செல்வதற்குமுன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருப்பதை உறுதிப்படுத்தத் தவறிய தால் இருவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த பொறியாள ருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஆக மோசமான அந்த ரயில் விபத்து 2016 மார்ச் மாதம் நடந்தது.

தனது கவனக்குறைவால் மரணம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 48 வயது முன் னாள் உதவிப் பொறியாளர் லிம் சே ஹெங்குக்கு நேற்று நான்கு வார சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. விபத்து நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். 2016 மார்ச் 22ம் தேதி, எஸ்எம் ஆர்டி பயிற்சி ஊழியர்களான 26 வயது நஸ்ருல்ஹுதின் நஜுமுதின், 24 வயது முகம்மது அசிரஃப் அகமது புஹாரி இருவரும், பாசிர் ரிஸ் ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத் தடத்தில் ஏற்பட்ட பழுதைக் கவனிக்கச் சென்றிருந்த போது ரயில் மோதி கொல்லப்பட்ட னர். லிம் வழிநடத்திச் சென்றிருந்த குழுவில் இருவரும் இடம்பெற்றி ருந்தனர்.

எஸ்எம்ஆர்டியின் முன்னாள் உத விப் பொறியாளர் லிம் சே ஹெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்