சாலை விபத்தில் அதிரடி போலிஸ் படை வீரர்கள் காயம்

சாலை விபத்தில் அதிரடி போலிஸ் படை வீரர்கள் காயம்

1 mins read
1c2c41a4-769b-43d4-b2c5-7868d3c6ccb0
-

சிறப்பு நடவடிக்கைகள் தளபத்தி யத்தின் போலிஸ் அதிரடிப் படை யைச் சேர்ந்த நான்கு வீரர்கள், இரு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அவர்களின் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண் டன. அதில் இரு போலிஸ் வீரர் கள் இலேசாகக் காயமடைந்தனர். இவ்விபத்து கடந்த சனிக் கிழமை தீவு விரைவுச் சாலையில் நிகழ்ந்தது. இவ்விபத்து மோட்டார் சைக் கிள்களுக்குப் பின்னால் சென்று கொண்டிருந்த காருக்குள் இருந்த கேமராவில் பதிவானது. அந்தக் காணொளி சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவியது.

காருக்கு இடப்பக்கத்திலிருந்து வந்த அந்த இரு மோட்டார் சைக்கிள்கள், முதலில் ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் பயணம் செய்தன. பிறகு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முன்னாள் இருந்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது, விபத்து நேர்ந்தது என்றும் இரு மோட்டார் சைக்கிள்களில் இருந்த நான்கு போலிஸ் வீரர்களும் சாலையில் விழுந்தனர் என்றும் காணொளி யில் தெரிந்தது.

தீவு விரைவுச்சாலையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முன்னால் இருந்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது விபத்து நிகழ்ந்தது என்று காணொளி மூலம் தெரிய வந்துள்ளது. படம்: ஃபேஸ்புக்/ஷைஃபுல் அப்பேக்