மதுபோதையில் லாரியை ஓட்டி அதை சிராங்கூன் ரோட்டில் உள்ள கூரையுடன் கூடிய நடைபாதையில் மோதிய அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பர் சிராங்கூன் ரோட்டை நோக்கிச் செல்லும் சிராங்கூன் ரோட்டில் நேற்று முன்தினம் பின்னிரவு 12.28 மணிக்கு ஒரு விபத்து நேர்ந்துள்ளது என்று தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. விபத்துக்குப் பிறகு லாரி ஓட்டுநர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். லாரியின் உள்ளே சிக்கியிருந்த ஓட்டுநரை சிங்கப்பூர் குடி மைத் தற்காப்புப் படை வீரர்கள் விடுவித்தனர். பின்னர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். போலிஸ் விசாரணை தொடர்கிறது. படம்: ஷின்மின்
சிராங்கூன் ரோடு நடைபாதையில் லாரி மோதியது; ஓட்டுநர் கைது
1 mins read
-

