புதிய தற்காப்புப் படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் மெல்வின் ஓங்

புதிய தற்காப்புப் படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் மெல்வின் ஓங்

1 mins read
bc58296e-86a9-47aa-852e-5b5a91deb3ef
-

சிங்கப்பூர் ராணுவப் படையின் தலை வராக இருந்து வரும் மேஜர் ஜெனரல் மெல்வின் ஓங் சூ கியட் (இடது), இம்மாதம் 23ஆம் தேதி முதல் தற்காப்புப் படையின் புதிய தலைவராகப் பொறுப்பேற்பார் என்று தற்காப்பு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது. 43 வயதாகும் திரு மெல்வின், தற்போது தற்காப்புப் படைத் தலைவராக உள்ள 46 வயது லெஃப்டினெண்ட் ஜெனரல் பெர்ரி லிம்முக்குப் பதிலாக புதிய பதவியை ஏற்றுக்கொள்வார். இந்த மாற்றங்கள் தலைமைத்துவப் புதுப் பிப்பின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளது என்று தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் கூறினார். புதிய ராணுவப் படைத் தலைவராக, தற்போது சிங்கப்பூர் ஆயுதப்படையின் ஆறாவது பெரும்படைப் பிரிவின் தலைவ ராக உள்ள 40 வயது பிரிகேடியர் ஜெனரல் கோ சி ஹோ (வலது) பொறுப்பேற்பார். படம்: தற்காப்பு அமைச்சு