பிரதமர் லீ: ஆற்றலுடன் தொடருவது ஆசியானுக்கு அவசியம்

பிரதமர் லீ: ஆற்றலுடன் தொடருவது ஆசியானுக்கு அவசியம்

1 mins read
14e535ed-e879-4491-b1f6-102aaab3b852
-

இந்த வட்டாரத்தில் ஆற்றலுடன் நீடிக்க ஆசியான் தனது கடின உழைப்பைத் தொடரவேண்டும் என பிரதமர் லீ சியன் லூங் (படம்) தெரிவித்துள்ளார். "ஆசியான் வட்டாரத்தில் தலையெடுத்துவரும் நாடு களின், குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவின், செல்வாக்கை உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் உணரத் தொடங்குகையில், புதிய உள்ளி யக்க முறைகளுக்கு ஆசியான் பழகிக்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார். ஆனால் இந்த ‚அலைகளின் ஈர்ப்பால் ஆசியான் பிளவுபட்டு விடக்கூடாது என்றார் அவர். "இந்த அலையிழுப்பின் உண்மை நிலவரத்தை நாம் ஏற்றாகவேண்டும். ஆயினும், இதன் காரணமாக ஆசியான் குழுவில் பிரிவினைகள் ஏற்பட்டு விடக்கூடாது," என்றார் பிரதமர் லீ. புதிய சக்திகள், குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவின் பலமும் செல்வாக்கும் வளர்ந்து வருகின்றன. இதனால் இவ்வட் டாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாவதாக அவர் குறிப்பிட்டார்.

"புதிய சக்திகளின் கொள் கைகளையும் ஆர்வங்களையும் நாடுகள் கவனத்தில் கொண்டா லும் தங்களது பாரம்பரிய அரசி யல், பொருளியல் உறவுகளையும் நிலைநாட்ட வேண்டும். அதே சமயம் அமெரிக்காவின் அரசி யல் மனோநிலை மாறியிருந் தாலும் ஆசியானின் பாதுகாப்பு நங்கூரமாகவும் உலகின் ஆகப் பெரிய பொருளியல் நாடாகவும் தொடர்ந்து திகழும் அமெரிக்கா, தென்கிழக்காசியாவில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வரும் என ஆசியான் நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன.