சிங்கப்பூரை சேர்ந்த இரு நிறுவ னங்கள் வடகொரியாவுக்கு ஆடம் பர பொருட்களை அனுப்பி, ஐக்கிய நாட்டு நிறுவனம் வடகொரியா வுக்கு எதிராக விதித்திருந்த தடைகளைப் புறக்கணித்துவிட் டன என்று ஐக்கிய நாட்டு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட் டுள்ளது. அறிக்கையின் இறுதி வடிவம் ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்றத் திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என் றும் அது இந்த வாரத்தின் பிற் பகுதியில் வெளியிடப்படும் என் றும் பிபிசி செய்தி கூறியது. அச்செய்தியின்படி, "இந்தச் சம்பவங்கள் குறித்து தனக்குத் தெரியும் என்று சிங்கப்பூர் அரசாங் கம் தெரிவித்துள்ளது. அது குறித்து புலனாய்வுகள் தொடங்கி விட்டன. கூறப்பட்ட தகவல்கள் நம்பும் வகையில் உள்ளனவா என் றும் அது குறித்து குற்றங்கள் புரி யப்பட்டனவா என்று ஆராயப்படும் என்றும் சிங்கப்பூர் கூறியது," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட அந்த இரு நிறுவனங் கள் 'ஓசிஎன்' மற்றும் 'டி ஸ்பெ ஷியசிஸ்ட்'. இந்த இரு நிறுவனங் களுக்கும் ஒருவரே இயக்குநராகச் செயல்படுகிறார். ஆனால், அந்த இரு நிறுவனங் களும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளன என்று பிபிசி கூறி யது. இணையத்தில் கசிந்த ஐக்கிய நாட்டு அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஆசிய நிறுவனங் களில் மேற்கூறப்பட்ட இரு நிறு வனங்களும் அடங்கும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை மேற்கூறப்பட்ட சிங்கப்பூர் நிறுவனங்கள் வடகொரியாவுக்கு பல்வேறு ஆடம்பர பொருட்களை அனுப்பியுள்ளன என்பது அறிக்கை யில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு.

